விழுப்புரம் மாவட்டம், ஆத்திப்பட்டு பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. திருவெண்ணைநல்லூர் அருகே விவசாய நிலத்திற்கு சென்று விட்டு திரும்பிய டிராக்டர் ஒன்று ரயில் கேட்டை கடக்க முயன்றது. அப்போது டிப்பர் மட்டும் இருப்புப்பாதையில் சிக்கி நின்று விட்டதால், செய்வதறியாது ஓட்டுநர் திகைத்து போனார். இதையடுத்து ரயில் வருவதை பார்த்த மக்கள் ஓட்டுநரை எச்சரித்து காப்பாற்றினர். பின்னர் நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற ரயில் டிப்பர் மீது மோதி தூக்கியடித்து நின்றது. இதன்காரணமாக ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டது.