8 வயது சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கி இருந்த பம்பர ஆணியை நவீன சிகிச்சை மூலம் 30 நிமிடத்தில் அகற்றி நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். வள்ளியூரை சேர்ந்த அந்த சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ள கூர்மையான ஆணியை விழுங்கிவிட்டு மூச்சு விட சிரமப்பட்டிருந்தார்.