சிவகங்கையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கவச உடைகளுடன் சென்று, அம்மோனியா வாயு கசிவை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.