கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு மஹா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளிட்ட 5 கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.