விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா 13 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில், அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசித்தனர்.