திருநள்ளாரில், ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், நவராத்திரி 2ஆம் நாளில், ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.காரைக்காலை அடுத்துள்ள உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம், ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் நவராத்திரி 2ஆம் நாளில், ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு, கையில் கரும்புடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ ராஜேஸ்வரி தாயாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.