சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு வேறு ஒரு இடத்தை ஒதுக்கி விட்டு அந்த இடத்தில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கி விட்டு அதே இடத்தில் அம்மா உணவகம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.