நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற அமினா குழுவினரால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இடது கை உடைந்தது. அவருக்கு 1 லட்சத்து 19ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.