சென்னை பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.