திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அமரர் ஊர்தி, சாலையோரமாக இருந்த கூரை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், 75 வயது முதியவரும், அமரர் ஊர்தி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செம்பனார்கோவில் பகுதிக்கு பிரேதம் எடுத்துச் சென்று ஒப்படைத்து விட்டு மீண்டும் திருவாரூர் திரும்பிக் கொண்டிருந்த அமரர் ஊர்தி, மகிழஞ்சேரி பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாலையோர கூரை வீட்டிற்குள் புகுந்ததோடு, அருகில் உள்ள தென்னை மரத்தில் மோதி நின்றது.