பட்டா கொடுத்தும் இடம் கொடுக்காததாகக் கூறி, வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை வரிச்சியூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி முத்துக்கிருஷ்ணனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஒத்தக்கடை பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டும் இதுவரை இடத்தை காண்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.