நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், அந்த வரிசையில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரனும் இணைந்தார். அருந்ததியர் சமூகத்தை வந்தேறிகள் என சீமான் கூறியதால் அதிருப்தியடைந்த அவர், கட்சியின் கொள்கையும் சீமானின் நடவடிக்கையும் நேர் எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி விலகினார்.