தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் அங்கு குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக திடீரென நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளதால், குளிக்க வனத்துறை மீண்டும் அனுமதி அளித்துள்ளது.