கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த கூவனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக இரவு பகலாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்டு இந்த ஏரியை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 6 மாதங்களாக அனுமதியின்றி வண்டல் மண் அள்ளப்படுவதாக அக்கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : திருத்தணி அருகே ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு... தகாத வார்த்தைகளால் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ