திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே எடையூர் கிராமத்தில் சுடுகாடு வரை செல்ல சாலை இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை மக்கள் சேற்றில் இறங்கி தூக்கி சென்றனர். எடையூர் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, போடப்பட்ட நிலையில், அது சுடுகாடு வரை போடப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த நபரின் உடலை சேற்றில் இறங்கி கிராம மக்கள் சுமந்து சென்றனர்.