அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவில் 140 விருதுகளை பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் பொதுமக்கள் மத்தியில் பரப்புரை செய்தார். அப்போது, திமுக ஆட்சியில் ஒரு திட்டத்தை கூட முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டியவர், எந்த தேசிய விருதையும் திமுக அரசு பெற்றதாக தெரியவில்லை என்று கூறினார்.