வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், தேர்தல் அதிகாரி முன்னிலையிலேயே பாஜக சிபிஎம் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரி, துணை தாசில்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உதவி ஆணையர், மண்டலக் குழு தலைவர், திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பில் பேசிய ஆர்.ஜெயராமன், வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளித்து பாஜக காலூன்ற நினைப்பதாக தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.