கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வருவாய் வட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி, அதிமுக தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.