திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்து நடந்த பகுதியில் கவிழ்ந்து கிடந்த 13 ரயில் பெட்டிகளையும் ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். விபத்துக்குள்ளான பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிபிசி என்ற தொழில்நுட்பம் இருந்ததாலேயே உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.