அரசியலில் மீனவ மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், 8 ஆண்டுகள் அல்ல, 80 ஆண்டுகள் ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறாது என தமிழக வெற்றி கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தெரிவித்துள்ளார். தூண்டில் வளைவு அமைக்க கோரி போராட்டம்நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்துக்குட்பட்ட மீனவ கிராமம் தோமையார்புரம். இக்கிராமத்தில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கடற்கரை தடுப்பு சுவர்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளால் தோமையார்புரம் ஊரில் கடற்கரையில் மணல் அரிப்பு அதிகமாகி சேதம் ஏற்படுத்தி வருகிறது. கடலுக்குள் இறங்க முடியாமல் மணல் திட்டால் படகுகளை கடலில் இறக்கி மீன் பிடிக்க செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கடந்த எட்டு ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் மூலம் கிராம மக்கள் எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி பகல், இரவு போராட்டமாக நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற அஜிதாஇதில், 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி, விரைவில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசி வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாக நடந்த போராட்டத்தில், தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்துகொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம்அப்போது அவர் பேசும்போது, அரசியலில் மீனவ மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் இந்த போராட்டம் 8 ஆண்டுகள் அல்ல 80 ஆண்டுகள் ஆனாலும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - இளம்பெண்ணின் செயலால் பறிபோன உயிர்