சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் விசாராணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஏழரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரியகருப்பன், தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை அஜித்குமார் தாயாரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.