சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து காவலர்களுக்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்நீட்டிப்பு செய்து மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மடப்புரத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து கொன்ற வழக்கில், கண்ணன், பிரபு, ஆனந்த்,ராஜா மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து காவலர்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.