செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஐயனாரப்பன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.மதுரா வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் பூஜை, நவகலச பூஜை யாகம், ஏகாதசருத்ர மஹாயாகம், செய்து சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.