சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சின்னமுத்தூர் ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக் கிராமத்தில் ஐயனாரப்பன், புடவை காரி அம்மன், பாப்பாத்தி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர், வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் மீது பூக்கள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.