திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர், கோயில் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் புறப்பட்டு சென்றார்.