திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் முறையாக வரி செலுத்தவில்லை எனக்கூறி நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியதோடு, நகராட்சி வாகனம் மற்றும் தூய்மை பணியாளர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு சொந்தமாக பழனியில் நர்சிங் கல்லூரி உள்பட 12 நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை 71 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியதோடு, நாகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.