சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் தொலைபேசி இணைப்பக சூப்பிரண்டாக பணியாற்று வந்த நிர்மலா, இரவு பணியில் இருந்த போது விமான நிலைய அலுவலக அறையிலேயே சேலையில் தூக்கிட்டுக்கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய நிலையில் முதல்கட்டமாக நிர்மலா சமீபகாலமாக மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதனிடையே தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.