கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்படும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.