விமான விபத்து நடைபெற்றால் பயணிகளை காப்பாற்றும் அவசரகால முழு ஒத்திகை பயிற்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்து காண்பிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, விமான விபத்து ஏற்பட்டால் அவசர கால தயார் நிலையை மதிப்பிடுவதற்காக, இந்திய விமான நிலைய ஆணையம், முழு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. மிகவும் தத்ரூபமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு விமான விபத்து சமயத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கி காட்டினர்.இதையும் படியுங்கள் : பக்தரின் நகை திருடியது தொடர்பாக விசாரணை... போலீஸ் கஸ்டடியில் கோயில் ஊழியர் உயிரிழப்பு?