பல்லாவரம் ஏரியில் படர்ந்து காணப்படும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் இருபுறமும் உள்ள ஏரியில் அதிக அளவுக்கு ஆகாய தாமரைகள் படர்ந்து காணப்படுதால் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதாக கூறும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாய தாமரைகளை உடணடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.