மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் கோவை வந்த ஏர் இந்தியா விமானம், கடும் பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்ததால் பயணிகள் பதற்றமடைந்தனர். 8:30 மணிக்கு தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் 9.05 மணியளவில் தரையிறங்கியது. இதே போல் டெல்லியில் இருந்து வந்த விமானமும் கோவையில் தரையிறங்க முடியாததால் கொச்சியில் தரையிறக்கப்பட்டது.