ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பறக்கும்படையினர் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லை கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்ற வாகனமும் தப்பவில்லை.