இந்திய விமானப்படையின் இறுதிக்கட்ட வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக ஒத்திகை நடைபெற்றது. 6-ம் தேதி நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியில் ரபேல், தேஜாஸ், மிராஜ், சுகோய் உட்பட 72 வகையான விமானங்களும், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் பிரசாந்த் மற்றும் டகோட்டா உள்ளிட்டவையும் பங்கேற்கின்றன. இந்நிகழ்ச்சியை காண, மெரினா கடற்கரையில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.