21 ஆண்டுகளுக்கு பின் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவிருக்கும் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானப்படையின் 93 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வரும் 6 ம் தேதி மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிகளும், 8 ஆம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்காக மெரினா கடற்கரையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, சாகச நிகழ்ச்சிகளுக்கான சிக்னல்கள் பொருத்தும் பணி, கூடாரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.