தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு விமானங்களில் திரும்பியதால் கட்டணங்கள் இருமடங்கு அதிகரித்து காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள், கார்கள், வேன்களில் ஆகியவற்றுடன் விமானங்களில் வரவும் மக்கள் ஆர்வம் காட்டியதால் சென்னை விமானத்தில் வருகை பகுதியில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலத்திலிருந்து சென்னை வரும் விமானங்களின் கட்டணங்கள் இருமடங்கு உயர்ந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் குறைவாக இருந்தது.