திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில், ஐப்பசி துலா ஸ்நான தீர்த்தவாரி வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுவது, காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என நம்பப்படுகிறது.ஐப்பசி மாத முதல்நாளில் திருப்பராய்த்துறையில் முதல் முழுக்கும், கடைசி நாளில் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கடைமுழுக்கும் போடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஐப்பசி முதல்நாளில் திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முன்னதாக அம்பாளும், சுவாமியும் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளினர்.