தூத்துக்குடியில் உள்ள பழமையான சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அம்பாள் பாகம்பிரியாள் அலங்காரத்திலும், சங்கரராமேஸ்வரர் சிவலிங்க அலங்காரத்திலும் காட்சி அளித்த நிலையில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.