திருநெல்வேலியில், நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடிப்பட்டம், அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசித்தனர். கம்பா நதியில் தவம் இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 14ஆம் தேதியும், முக்கிய நிகழ்ச்சியான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருமண வைபவம் 15ஆம் தேதியும் நடைபெற உள்ளது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவிற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்பாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், தங்க சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அம்பாளுக்கும் கொடி மரத்திற்கும் சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.