ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவத்தில், ஆண்டாள் ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சுவாமிகளுக்கு கோவில் பட்டர்கள் சிறப்பு பூஜை நடத்தியதை தொடர்ந்து, திருவாய்மொழி சேவா காலம் நடைபெற்றது.