கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஐப்பசி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் கண்டனர். ஐப்பசி மாத பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, சத்திய ஞான சபையில் 6 திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.