அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் அதிமுக வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காசிமேடு மீனவ கிராம பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கெளதமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.