திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நயினார் நாகேந்திரன் உடன் சுமார் 30 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.