அதிமுக நிர்வாகியின் முகநூல் கருத்துக்கு, அதிமுக அம்மா பேரவை நிர்வாகி கிணடலாக கமெண்ட் செய்ததால், அவரது வீட்டை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், திருப்போரூர், செய்யூர் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி வாகை சூடி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர வைப்போம் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரியாக்ட் செய்த அச்சிறுப்பாக்கம் அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர், முதலில் அச்சிறுப்பாக்கத்தை சரி பண்ணுங்க தலைவா என கமெண்ட் செய்திருந்தார். இதனால் அவரது வீட்டிற்கு முன்பாக அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.