சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீரென புகுந்த அதிமுகவினர் யார் அந்த சார்? எனக் கேட்டு போராட்டம் நடத்தினர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்படும் நபர் யார்? எனக் கேட்டும், யார் அந்த சார்? எனக் கேட்டும் பதாகை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட அதிமுக ஐ.டி. விங் நிர்வாகிகள் திடீரென உள்ளே புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பரபரப்பு ஏற்பட்டது.