திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவற்றை பொதுமக்கள் அள்ளி சென்றனர். மா விவசாயிகளுக்கு ஆதரவாக மாங்காய்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய லாரி... லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்