திருப்போரூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்டக் கிழக்கு அதிமுக சார்பில் வரும் 9 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தின் முன் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.