கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளதாக அப்பகுதி அதிமுக எம்.எல்.ஏ. தாமோதரன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் பவுன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது பாஜகவினரும் உடன் இருந்தனர்.