விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அதிமுக கொடிக்கம்பம் மீண்டும் அதே பகுதியில் நிறுவப்பட்ட நிலையில், அதனை போலீசார் அப்புறப்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தலின் போது நன்னடத்தை விதிகள் காரணமாக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொடிக் கம்பங்கள் வைக்கக் கூடாது என மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மயிலம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடக்கவிருப்பதால், அகற்றப்பட்ட கொடிக்கம்பம் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது. இதனை அறிந்த பிற கட்சியினர் தாங்களும் கொடிக்கம்பம் அமைக்கப்போவதாக கூறியதால், போலீசார் அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றினர்.