தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் ஒன்றிய துணை சேர்மனான மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்த வெளியப்பன், காலை வழக்கம் போல் நடை பயிற்சி மேற்கொண்டதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். தகவலறிந்து சென்ற போலீசார் வெளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனை அனுப்பினர்.இந்நிலையில் கொலை தொடர்பாக மேல நீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.