புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக அதிமுக நிர்வாகியின் மகனை, ஊர்மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ராஜாளிப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் பாண்டியனின் 22 வயது மகன் பிரகாஷ், அப்பகுதி பெண்கள் வீட்டில் குளிப்பதை ரகசியாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அவனை பிடித்து வெளுத்து வாங்கினர். தகவலறிந்து சென்ற போலீசார், பிரகாஷை மீட்டு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இதையும் படியுங்கள் : எலுமிச்சை கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை... ரூ. 100 க்கு கொள்முதல் செய்யப்பட்ட எலுமிச்சை ரூ. 20க்கு கொள்முதல்